2021 ஏப்ரல் 11, ஞாயிற்றுக்கிழமை

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் மஹிந்த?

Menaka Mookandi   / 2016 மார்ச் 17 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சற்றுமுன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவிருந்த, கூட்டு எதிரணியினரின் கூட்டம் நடைபெற ஏற்பாடாகியுள்ள ஹைட் மைதான வளாகத்தில் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில், பொல்லுகளுடன் சிலர் அலைந்து திரிவதாகக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமையவே, அப்பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மைதானத்தை அண்டிய பகுதிகளிலுள்ள வீதிகளும் பொலிஸாரால் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .