2021 மே 15, சனிக்கிழமை

வெலே சுதாவின் சகோதரன் கைது

Kanagaraj   / 2015 செப்டெம்பர் 28 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை வித்தானகே அசோக் குமார என்பவரின் சகோதரன் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர், கல்கிஸை நீதவான் முன்னிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோது அவரை 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நீதவான் அனுமதியளித்துள்ளார்.

தெஹிவளை, கச்டான வீதியில் வைத்து அவர் கைதுசெய்யப்பட்டதாகவும் அவரை கைதுசெய்யும் போது அவரிடம் 5 கிராம் மற்றும் 100 மில்லிகிராம் ஹெரோய்ன் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .