S.Renuka / 2026 ஏப்ரல் 02 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்குப் பிரதானமாக நீர் விநியோகம் செய்யும் கலட்டுவாவ நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்னும் 20 நாட்களுக்கு மாத்திரமே நீர் எஞ்சியுள்ளதாகத் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று வியாழக்கிழமை (02) கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, நாட்டில் நிலவும் கடும் வறட்சியான காலநிலை மற்றும் அதிகரித்துள்ள நீர் நுகர்வு காரணமாக, எதிர்வரும் நாட்களில் நீர் விநியோகத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்.
கலட்டுவாவ நீர்த்தேக்கத்தில் 20 நாட்களுக்கும், லபுகம நீர்த்தேக்கத்தில் இன்னும் 50 நாட்களுக்குமான நீர் மாத்திரமே தற்பொழுது எஞ்சியுள்ளது.
எதிர்வரும் 2-3 வாரங்களுக்கு மழை வீழ்ச்சி கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
தற்போதைய நீர் இருப்பைக் கொண்டு ஏப்ரல் 20ஆம் திகதி வரை நீர் விநியோகத்தை முகாமைத்துவம் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கலட்டுவாவ நீரின் ஆயுட்காலத்தை 30 அல்லது 40 நாட்களுக்கு நீட்டிப்பதற்காக, உற்பத்தித் திறனைப் படிப்படியாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
16 minute ago
25 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
25 minute ago
36 minute ago