Princiya Dixci / 2017 மே 20 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், ஆ.ரமேஷ்
கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கட்ட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டுள்ள திம்புள்ள- பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தனை, கிறேக்கிலி தோட்டத்தைச் சேர்ந்த 20 வயதுடைய ராமர் நிரோஷன் என்பவரை உடனடியாக மீட்டுத் தருமாறு, அவரது குடும்பத்தார் மற்றும் பிரதேசவாசிகள் உருக்கமாக வேண்டுகின்றனர்.
இளைஞனை மீட்பதில், அதிகாரிகள் அசமந்த போக்குக் காட்டுவதாக எதிர்ப்புத் தெரிவித்து, கிறேக்கிலித் தோட்டத்தின் கொழுந்து நிறுக்கும் பொது இடத்தில், இளைஞனின் தாய் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள், இன்று (20) காலை ஒன்றுகூடி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
குறித்த தோட்டத்தைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் பாதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
அனர்த்தம் இடம்பெற்று மூன்று நாட்கள் கடந்த பின்பும் இளைஞனை மீட்பதில் அதிகாரிகள் கவனகுறைவுடன் செயல்படுகின்றனர் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
இது தொடர்பில் அதிகாரிகளிடம், இளைஞனின் உறவினர்களிடம் தோட்ட முக்கியஸ்தர்களும் வினவியபோது, மீட்டுத் தருவதாக கூறுகின்றார்களே தவிர அதற்கான ஏற்பாடுகளை இன்னும் செய்யவில்லை என புகார் தெரிவித்து, இப்போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அதேவேளை கட்டிட சரிவு அனர்த்தத்தில் சிக்குண்டதாகக் கூறப்படும் இளைஞன், உயிரோடு இருக்க வேண்டுமென, அவ் இளைஞனுக்காக கிறேக்கிலி தோட்ட காளியம்மன் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.






2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago