2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

வெள்ளவத்தை அனர்த்தம்: கட்டட உரிமையாளருக்கு விளக்கமறியல்

George   / 2017 மே 21 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, வெள்ளவத்தைப் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற கட்ட சரிவு தொடர்பில், கைதுசெய்யப்பட்ட உரிமையாளரை எதிர்வரும் 26ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கட்ட சரிவு தொடர்பில், கட்டடத்தின் உரிமையாளர்  பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார். அதனையடுத்து, அவரை கைதுசெய்ய பொலிஸார், நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்தக் கட்டடமானது கட்டுமான விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் கட்டப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கட்டட நிர்மாணிப்பதற்காக தம்மிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்படவில்லை  என, தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 மாடிகளை அமைப்பதற்காக அனுமதிப் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், 5 மாடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன், இன்னும் இரண்டு மாடிகளை அமைக்க முற்பட்ட நிலையில், அந்தக் கட்டடம் சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .