2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு

Super User   / 2010 ஜூன் 24 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம் எதிர்வரும் ஜூன் மாதம் 26ஆம் திகதி நடத்தப்படக்கூடாது என கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்தோடு முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் பி.எம்.முர்ஷிதீன் தமது அங்கத்துவத்திலிருந்து வெளியேற்றப்படக்கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிபதி எம்.லஃபார் தாஹிர்   நேற்று இத்தடை உத்தரவை பிறப்பித்தார்.

கொழும்பு 10.மாளிகாவத்தை,ஸ்ரீ சத்தர்ம மாவத்தை,இலக்கம் 239 ஐச் சேர்ந்த பி.எம்.முர்ஷிதீன் சார்பில் சட்டத்தரணிகள் எம்.ஆர்.எம் பஸீம்,என்.எம்.ரியாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் சிரேஷ்ட சட்டத்தரணி பாரூக் தாஹிர் ஆஜரானார்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--