Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 07 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்லமலல – பதகிரிய வீதியில் நேற்று (06) மாலை 4.15 மணிக்கு இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நபர், ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீதியில் பயணித்த டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதாலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய ஹம்பலாத்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய சீந்தக்க மிகஸ்தெனிய என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகன சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன.
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
6 hours ago
6 hours ago