2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஹெலிகொப்டர் மூலமாகச் சென்று படகுகள் வழங்கிவைப்பு

Editorial   / 2017 மே 28 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாவட்டத்தில், காற்று மற்றும் வௌ்ளத்தால் பாதிக்கப்பட்ட  மக்களை, அவ்விடத்திலிருந்து  மீட்பதற்காக, இராணுவத்தினர் ஹெலிகொப்டர் மூலமாகச் சென்று, படகுகளை  வழங்குகின்றனர்.

குறித்த பகுதிகளுக்கு தரைமார்க்கத்தின் ஊடாக சென்று, மீட்பு பணிகள் மேற்கொள்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளமையினால் இவ்வாறு ஹெலிகொப்டர் மூலமாகச் சென்று படகுகள் வழங்கப்படுகின்றன.

இலங்கை வரலாற்றிலேயே முதன்முறையாக இவ்வாறு ஹெலிகொப்டர்களின் ஊடாக சென்று படகுகள் வழங்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X