2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

100 நாள்களில் அரசாங்கத்தின் சாதனை இதுவா?

Editorial   / 2020 பெப்ரவரி 29 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கொள்ளப்பட்டு விட்டதாக ஜனாதிபதியும் ஆளும் கட்சி முக்கியஸ்தர்களும் தெரிவிப்பதாக சாடும்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன்,  இதுவா அரசாங்கத்தின் 100 சாதனை என்றும் வினவினார்?

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட நெடியமடு தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியானது இன்று (29)நடைபெற்றது,  

குறித்த  பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பொதுஜன பெரமுன கட்சிக்கு தாவிச் ​சென்ற ஒருவர்  100 நாள்களில் புதிய அரசாங்கம் சாதனை புரிந்துள்ளதென கூறுவதாகவும், ஆட்சி மாற்றத்தின் பின்னரான 100 நாள்களில் தமிழ் மக்களுக்கு கிடைத்த வேதனைகனை மக்கள் அறிவர் என்றார்.

தமிழில் தேசிய கீதம் பாடப்படவில்லை, தேசிய பொங்கல் நிகழ்வை கொண்டாட அனுமதிக்கவில்லை எனத் தெரிவித்த அவர்,  காணமல் ஆக்கப்பட்டோர் கொல்லப்பட்டு விட்டார்கள் தேவையெனில் மண்ணைத் தொண்டிப்பாருங்கள்  என்று கூறுகிறார்கள் எனவும் சாடினார். 

அப்பாவி தமிழர்களை கொலைச் செய்த இராணுவ சிப்பாய்கள் விடுதலை பெற்றுள்ளதாகவும், தமிழ் பிரதேசங்களில் பணியாற்றிய பல நேர்மையான அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் சாடினார். 

மேலும் ஐ.நா.மனித உரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் வாபஸ் பெறப்பட்டுள்ளனவென தெரிவித்த அவர்,  தமிழ் மக்களுக்கு எதிரான பல செயற்பாடுகள் ஆரங்கேற்றப்படுவதாகவும் சாடினார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X