2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

ஆஸியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 100பேர் இலங்கை திரும்பினர்

Menaka Mookandi   / 2012 நவம்பர் 21 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற நிலையில் அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் ஒரு தொகுதியினர் இன்று நாடு திரும்பினர்.

அவுஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் இந்த ஒன்பதாவது குழுவில் 100பேர் அடங்குவதாக அந்நாட்டு குடிவரவு அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட 100பேரும் ஆண்கள் எனவும், இம்மாதத்தில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டவர்களில் இதுவே அதிகளவுபேர் அடங்கிய குழுவாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவுஸ்திரேலிய விமானப்படைக்குச் சொந்தமான கே.சி – 30 என்ற விசேட விமானம் மூலம் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் இதுவரையில் 525பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் கிறிஸ் போவன் கூறியுள்ளார்.

விஸா இன்றி அவுஸ்திரேலியாவில் எவரும் தங்கவைக்கப்படமாட்டார். இவ்விடயம் தொடர்பில் பலமுறை அறிவித்தும் கடத்தல்காரர்களின் பேச்சுக்களில் ஏமாற்றமுறும் பலர், தங்களது பணத்தினை இழந்துகொண்டு அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக வருகை தருகின்றனர்.

இவர்களை அவுஸ்திரேலியா அரசாங்கம் எவ்வகையிலும் நாட்டில் தங்கவைக்காது. அவர்களைத் திருப்பி அனுப்பவே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருகை தருபவர்கள் நவுறு மற்றும் மனுஸ் தீவுகளில் தங்கவைக்கப்பட்ட நிலையிலேயே இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர் என்று அவுஸ்திரேலிய அமைச்சர் கிறிஸ் போவன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .