2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

13ஆவதை எதிர்த்து விமல் மனுத் தாக்கல் செய்யவில்லை

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 12 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை இரத்துச் செய்யுமாறு தேசிய சுதந்திர முன்னணி உயர் நீதிமன்றத்தில் இன்று மனு ஒன்றை தாக்கல் செய்யவிருந்தபோதிலும், அந்த மனுவை இன்று தாக்கல் செய்யவில்லை.

சட்டவரைஞர்களின் ஆலோசனைகளை அடுத்தே மனுவை இன்று தாக்கல் செய்யாமல் ஒத்திவைக்கத் தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப் பிரேரணையை பரிசீலிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள  நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணி தலைவருமான விமல்  வீரவன்ஸ அங்கத்தவராக இருக்கின்றார்.

இந்தத் தருணத்தில் இந்தப் பிரேரணையை சமர்ப்பிப்பது நன்னெறி சார்ந்ததாக இருக்காது என சட்டவரைஞர்கள் சுட்டிக்காட்டியதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .