2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ஐ.தே.க.வின் சீர்த்திருத்த தீர்மானம் ஜனவரி 13இல்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 10 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டம் எதிர்வரும் 13ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இக்கூட்டத்தில் சீர்த்திருத்தம் பற்றிய முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

இதேவேளை, கட்சியின் சீர்த்திருத்தங்களை வலியுறுத்தி வந்த சஜித் பிரேமதாஸ, கட்சியானது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

கட்சியின் சீர்த்திருத்தங்களை உள்ளுராட்சி தேர்தல் முடியும் வரை தாமதப்படுத்த வேண்டும் என சிலரும் கட்சியின் சீர்த்திருத்தம் தேர்தலின் முன் மேற்கொள்ளப்பட வேண்டும் என சிலரும் கருதுகின்றனர்.

இதுபற்றி தீர்மானம் எதிர்வரும் வியாழக்கிழமை ஒருமனதாக எடுக்கப்படும் என கட்சியின் பேச்சாளரும் காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

எது எப்படியிருப்பினும் உள்ளுராட்சி தேர்தலில் கட்சியின் வேட்பாளர்களை ஐக்கிய தேசிய கட்சியினர் முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும் என கட்சியின் இணைச் செயலாளரும் அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சஜித் பிரேமதாஸ கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X