2021 மே 08, சனிக்கிழமை

13ஆம் திருத்த விவகாரம்; எம்.பி.க்களின் கூட்ட முடிவை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க தீர்மானம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 06 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}


13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று வியாழக்கிழமை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியின் குழு அறையில் இடம்பெற்றது.

முற்போக்கு மற்றும் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு - கிழக்கு உள்ளிட்ட முஸ்லிம் உறுப்பினர்கள், மலையக நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்க்கட்சி உறுப்பினர்கள் மற்றும் 13ஆவது திருத்த அமுலாக்கத்தை வலியுறுத்தும் அமைச்சர்கள் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

சுமார் மூன்று மணிநேரமாக நடைபெற்ற இக்கூட்டத்தின் முடிவில் மீண்டும் நாளைய தினம் இக்கூட்டத்தினை தொடருவது என தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இக்கூட்டத்தினை படிப்படியாக விஸ்தரிப்பது எனவும் கூட்டத்தின் முடிவுகளை அறிக்கையாக தயாரித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்தி

13ஆவது திருத்தச்சட்ட அமுலாக்கலுக்கு ஆதரவான எம்.பி.க்களின் கூட்டம் நாளை

  Comments - 0

 • rima Thursday, 06 December 2012 04:57 PM

  இங்கோ உள்ள,முஸ்லிம், தமிழ்க்கட்சி உறுப்பினர்கள் இந்த அரசுக்கு வக்காலத்து வாங்கும் மக்கள் துரோகிகள்,

  Reply : 0       0

  Mohan Friday, 07 December 2012 01:00 AM

  எங்கே தமிழ் தேசிய கூட்டமைப்பினரை (TNA) காணோம் ?
  ஏன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை?
  காரணம் என்ன?

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X