Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜூன் 15 , பி.ப. 02:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
நமீபியாவில் 2007 ஆம் ஆண்டு மோசடியான வகையில் வங்கி அட்டைகளை தயாரித்த இலங்கையர் ஒருவர் மீது 1516 கிரிமினல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
24 வயதான அந்தனி சுரேஷ் குமார் ஸ்டானிஸ் எனும் இந்நபர் நேற்று மீண்டும் பிணை அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார். அவர் மீதான வழக்கு வின்தோக் நகரிலுள்ள மேல் நீதிமன்றத்தில் டிசெம்பர் முதலாம் திகதியிலிருந்து தொடரவுள்ளது.
2007 செப்டெம்பர் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்ட அவர் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஸ்டானிஸ் மீதும் அவரின் சகாக்கள் ஐவர் மீதும் 1516 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவர்கள் போலியாக வங்கி அட்டைகளைத் தயாரித்து நமீபிய வங்களின் தன்னியக்க பணம்வழங்கல் இயந்திரங்கள் மூலம் பணம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இவர்கள் மோசடியாக பெற்ற பணத்தின் அளவு 1467 நமீபிய டொலர்கள் ஆகும் எனக் கூறப்படுகிறது. இவர்கள் தம்மீதான குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர்.
இவ்வழக்கின் மற்றொரு சந்தேக நபரான இலங்கையைச் சேர்ந்த அமிர்தலிங்கம் புகழேந்தி என்பவர் 2008 டிசெம்பர் மாதம் 200,000 நமீபிய டொலர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். ஆனால் இறுதியாக கடந்த வருடம் பெப்ரவரி 20 ஆம் திகதி களுத்துறை பொலிஸில் ஆஜரான அவர் நமீபியாவை விட்டு தப்பிச் சென்றுவிட்டதாக நமீபிய பத்திரிகையொன்று தெரிவித்துள்ளது.
49 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
1 hours ago
1 hours ago