2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டில் வெலிக்கடை சிறை; உயிரிழந்தோர் தொகை 16ஆக உயர்வு

A.P.Mathan   / 2012 நவம்பர் 10 , மு.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிக்கடை சிறைச்சாலைக்குள்ளிருந்த கைதிகளுக்கும் படையினருக்குமிடையில் ஏற்பட்ட மோதல் நிலை, விசேட இராணுவ கொமாண்டோக்களின் அதிரடி நடவடிக்கையின் மூலம் இன்று அதிகாலை கட்டப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக இராணுவ உத்தியோகபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளதுடன் காயமடைந்தோரின் எண்ணிக்கை 47 ஆகவும் அதிகரித்துள்ளது.

இதேவேளை, தப்பியோடிய கைதிகளை கைதுசெய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கலவரத்தில் ஈடுபட்ட  7 கைதிகள் சரணடைந்ததாகவும் உத்தியோகபூர்வ செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையை முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த விசேட இராணுவ கொமாண்டோக்கள் இன்னமும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பெருமளவிலான ஆயுதங்களும் காணாமல் போயுள்ளதாகவும் அதனை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .