2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

அவுஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற 17 இலங்கையர்கள் கைது

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

அவுஸ்திரேலியாவை நோக்கி சட்டவிரோதமான முறையில் படகொன்றில் சென்ற 17 இலங்கையர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹம்பாந்தோட்டைக்கு தெற்கே 20 கடல் மைல் தொலைவில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார.

கடுவெல மற்றும் மிரிஸ்ஸ பகுதிகளைச் சேர்ந்த இம்மீனவர்கள் காலிக்கு கொண்டுவரப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி படகிலிருந்து உலர் உணவுப் பொருட்கள், தண்ணீர் போத்தல்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--