2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

மூதூரில் 17பேர் கொலை; குற்றவாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை - பிரான்ஸ்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 02:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

"யுத்த காலத்தின்போது மனித நேய பணிகளில் ஈடுபட்டிருந்த 17 தொண்டு நிறுவன பணியாளர்கள் கொல்லப்பட்டமைக்கு காரணமானவர்கள் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை" என்று பிரான்ஸ் வெளிநாட்டு அமைச்சர் பேனார்ட் கௌஷர் தெரிவித்துள்ளார்.

உலக மனிதநேய தினத்தை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே மேற்கண்டவாறு  குறிப்பிட்டுள்ளார். "இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தின்போது கொல்லப்பட்ட 17பேரின் மரணத்திற்கு யார் காரணம் என இதுவரை கண்டறியப்படவில்லை.

ஏ.சி.எப். என்ற அமைப்பினுடைய 17 அங்கத்தவர்கள் கடந்த 2006ஆம் மனித நேயப்பணிகளில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்தப்போது கொல்லப்பட்டார்கள். நாங்கள் இந்த சம்பவத்தை நினைவில் கொண்டுள்ளோம்.

"ஆனால் அவர்களது மரணத்திற்கு காரணமானவர்கள் இதுவரையில் கண்டுப்பிடிக்கப்படவில்லை. மனித நேயத்திற்கு பாதுகாப்பு வழங்க பிரான்ஸ் அமைப்பு என்றும் முன்னிலையில் இருக்கும். அதேவேளை மனித நேயத்திற்கு எதிராக செயற்படுபவர்களுக்கும் பிரான்ஸ் அரசு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்.

மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு மிகவும் முதன்மையானது. மனிதாபிமான தொண்டர்களின் பாதுகாப்பு குறித்து எதிர்வரும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தவுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X