Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 நவம்பர் 17 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது தவணைக்கால பதவியேற்பு வைபவத்தையொட்டி, கொழும்பு கோட்டைக்கு இட்டுச் செல்லும் அனைத்து வீதிகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், இன்று புதன்கிழமை முதல் நவம்பர் மாதம் 21ஆம் திகதி வரை சுதந்திர சதுக்கத்திலிருந்து பொதுநிர்வாக அமைச்சு சந்திவரையான வீதியும் மூடப்படவுள்ளதால், இருவழிப் போக்குவரத்திற்கும்; மெயிற்லன்ட் கிறசன்ற் மற்றும் மெயிற்லன்ட் கிறசன்ற் வீதியைப் பாவிக்குமாறு பொதுமக்களை பொலிஸார் கோரியுள்ளனர்.
இதேவேளை, கொழும்பில் 1, 2, 3, 4 இல் அமைந்துள்ள பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளன. விசாகா வித்தியாலயம், லின்ட்சே பாலிகா வித்தியாலயம், மிலாகிரிய புனித போல்ஸ் மகளிர் பாடசாலை, பிஷப் கல்லூரி, புனித அந்தோனியார் பாடசாலை, புனித தோமஸ் ஆரம்பப் பாடசாலை, பாதுகாப்பு சேவைக் கல்லூரி முதலானவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை மூடப்படவுள்ளன. (DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025