2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

தமிழக மீனவர்கள் 20 பேர் இலங்கை கடற்படையினரால் கைது

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 03 , பி.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் 20 பேரை இலங்கை கடற்படை பிடித்துச் சென்றுள்ளதாக இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன. கச்சச்தீவு அருகே 5 விசைப் படகுகளில் மீன்பிடித்த தமிழக மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களிடம் மன்னார் கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படை விசாரணை நடத்தியுள்ளது என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி முதல் தற்போது வரை இலங்கை கடற்படையால் 18 முறை தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. 

இந்தத் தாக்குதலில் மீனவர்கள் 236 பேர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களில் 94 பேர் இலங்கை சிறையில் உள்ளனர் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--