2021 ஜனவரி 23, சனிக்கிழமை

வெலிக்கடையில் 2000 இராணுவத்தினர்; கவச வாகனங்களும் குவிப்பு

Menaka Mookandi   / 2012 நவம்பர் 09 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


வெலிக்கடை சிறைச்சாலையின் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக சுமார் 2 ஆயிரம் இராணுவத்தினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இராணுவத்தினரின் கவச வாகனங்களும் சிறைச்சாலை வளாகத்துக்கு கொண்டுவரப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சம்பவத்தின் போது தப்பிச் செல்ல முற்பட்ட சிறைக் கைதி ஒருவர் பொலிஸ் விசேட அதிரப்படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று நம்பப்படுகின்றது.

காயங்களுக்கு உள்ளான மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், சிறைச்சாலையினுள் பலத்த காயங்களுக்கு உள்ளான பலர் காணப்படுவதாகவும் அவர்களை வைத்தியசாலையில் சேர்ப்பதற்கான முயற்சிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .