2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் பிராந்திய பயிற்சி நிலையத்தின் திறப்பு விழா

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , மு.ப. 07:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு மாகாண  சுகாதார அமைச்சின் பிராந்திய பயிற்சி நிலையத்தின் திறப்பு விழாவும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் வெள்ளிக்கிழமை (09.07.2010) காலை திருகோணமலையில் நடைபெற்றது.

 கிழக்கு மாகாண முதல் அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்கான அடிக்கல்லினை நட்டு வைத்த பின்னர் கிழக்கு மாகாண பிராந்திய பயிற்சி நிலையத்தின் பெயர் படிகத்தை திரை நீக்கம் செய்து வைத்தார்.

 கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.சுபைர் பயிற்சி நிலையத்தினை திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நிர்மாண, நீர்வழங்கில் அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்கா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அரியவதி கலபதி, மாகாண சுகாதார சேவைகள் பிணப்பாளர் வைத்திய கலாநிதி எம்.தேவராஜன், மாகாண பொது சுகாதார வைத்திய அதிகாரி ஈ.ஜி.ஞானகுணாளன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.தகவல்: சி.சசிகுமார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--