2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

அடைக்கலம் கோரிய இலங்கை தமிழரில் புலி உறுப்பினர்கள் இல்லை - கனடா அரசு

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் அடைக்கலம் கோரியுள்ள இலங்கைத்  தமிழர்களில், விடுதலைப் புலி உறுப்பினர்கள் எவரும் இல்லை என்று அந்நாட்டு அரசு விளக்கமளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

"ஓசியன் லேடி" என்னும் கப்பலின் மூலம் கனடாவுக்கு தஞ்சம் கோரிச் சென்ற இலங்கைத் தமிழர்கள் 76பேர் அந்நாட்டு அரசாங்கத்திடம் அடைக்கலம் கோரியிருந்தனர்.

இவர்களில் 25பேர் விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்று செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு பதிலளித்துள்ள கனடா அரசாங்கம், அந்த செய்திகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தியதில் அவர்களுக்கும் புலிகள் அமைப்புக்கும் தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கனடா அரசு கூறியுள்ளதாக அந்நாட்டு  இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--