2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

மகளுடன் தொலைபேசியில் உரையாட பொன்சேகாவுக்கு நீதிமன்றம் மறுப்பு

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவிலுள்ள தனது மகளுடன் தொலைபேசியில் உரையாடுவதற்காக ஜெனரல் சரத் பொன்சேகாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனு, கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று நிராகரிக்கப்பட்டது.

விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவருக்கு அவ்வாறானதொரு சலுகையினை வழங்க முடியாது என்று கூறியே ஜெனரல் பொன்சேகாவின் மேற்படி கோரிக்கை மனு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா சார்பில், அவரது சட்டத்தரணியினால் இந்த கோரிக்கை மனு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.

இதேவேளை, இராணுவ பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெனரல் பொன்சேகாவின் உடல்நலனைப் பேணும் பொருட்டு சிறைக்கூடத்துக்கு வெளியே நடை பயிற்சியில் ஈடுபடுவதற்கும் அனுமதியளிக்குமாறு அந்த மனுவில் மேலும் கோரப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கை குறித்து சிறைச்சாலை அதிகாரிகளுக்கு கவனம் செலுத்துமாறு உத்தரவிட்ட கோட்டை நீதிவான், ஜெனரல் பொன்சேகாவுக்கான விளக்கமறியலை இம்மாதம் 26ஆம் திகதி வரையில் நீடித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--