2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

பாதை திருத்தப்படாததை எதிர்த்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாண சபைக்கு சொந்தமான பூஜாபிட்டிய தொடன்தென்ன பாதை செப்பமிட்டு திருத்தப்படாததை எதிர்த்து சுமார் 1000க்கும் மேற்பட்ட பிரதேசவாசிகள் இன்று திங்கட்கிழமை காலை முதல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை ஆரம்பித்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரிய மரத்துண்டுகளால் பாதையை மூடிவிட்டு  டயர்களை எரித்து பாதையில் செடிகளை நாட்டி  தமது எதிர்ப்பை தெரிவித்தனர்

நான்கு கிலோ மீற்றர் தூரம் கொண்ட இப்பாதையை சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயன்படுத்தப்படுகின்றது. எனினும், பல வருடகாலமாக இப்பாதை திருத்தப்படவில்லை எனவும் மக்கள் கூறுகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--