2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

தர்ஷிகாவின் இறுதிக் கிரியை இன்று இடம்பெற்றது

Suganthini Ratnam   / 2010 ஜூலை 12 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலனை வைத்தியசாலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் சரவணை தர்ஷிகாவின் இறுதிக் கிரியைகள் இன்று யாழ் குடாநாட்டில் இடம்பெற்றது.
இதேவேளை, இவரது மரணம் தொடர்பாக யாழ்ப்பாணம் கைதடிச் சந்தியில் குடும்பநல உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து இன்று பிற்பகல் ஒரு மணிநேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்படி சடலத்தை அடக்கம் செய்வதற்கு எடுத்துச் சென்றபோது கைதடிச் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட வைத்தியரை கைது செய்யுங்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நட்டஈடு பெற்றுக் கொடுங்கள் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்றது. இதனால் அப்பகுதியூடான போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிதம் அடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--