2020 ஒக்டோபர் 01, வியாழக்கிழமை

தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரை கைது செய்ய உத்தரவு

Suganthini Ratnam   / 2010 ஜூலை 13 , பி.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலணை வைத்தியசாலையிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பாக சந்தேக நபரான வைத்தியர் செனவிரட்னவை கைது செய்யுமாறு இன்று  ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊர்காவற்றுறை பொலிஸாரிடமே இதற்கான உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

இதேவேளை, இன்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை யாழ். பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன்  ஏற்றுக்கொண்டததை அடுத்து இன்று நண்பகல் 12 மணியுடன் ஆர்ப்பாட்டம் முடிவுக்கு வந்தது.

தர்ஷிகாவின் குடும்பத்திற்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட வேண்டும், குறித்த வைத்தியரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், வைத்தியரை பணிநீக்கம் செய்ய வேண்டும், அமைச்சு மட்டத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும், மரணம் தொடர்பில் அனுதாபம் தெரிவிக்காமைக்கு காரணம் கூற வேண்டும், தங்களுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்படும் வரை தாம் இரவு நேரத்தில் வேலை செய்யமாட்டோம், மருத்துவ தாதிமார்களை அடிமைப்படுத்தும் செயலை நிறுத்த வேண்டும் ஆகிய 7 கோரிக்கைகளை முன்வைத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .