2025 நவம்பர் 23, ஞாயிற்றுக்கிழமை

சட்டத்தை மதிக்கும் பழக்கத்தினை பாடசாலை காலத்தில் கற்க வேண்டும்

Menaka Mookandi   / 2010 ஜூலை 15 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்கள் சட்டத்தை மதிக்கும் பழக்க வழக்கங்களைப் பாடசாலையிலேயே பழகிக்கொள்ள வேண்டும் என்று கிளிநொச்சி மாவட்ட நீதிபதி பெருமாள் சிவகுமார் தெரிவித்தார்.

இதேவேளை, மாணவர்கள் தங்களது  உயர்கல்விக்காக சட்டத்துறையை அதிகளவில் தெரிந்தெடுக்க வேண்டும் என்றும் அவர்  ஆலோனை விடுத்தார்.

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர் ஒன்று கூடல் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றியபோது நீதிபதி மேற்கண்டவாறு கூறினார். இந்நிகழ்வில் கல்வித்திணைக்கள  உயரதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X