2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

கிளிநொச்சி வடமாகாணசபையின் தமிழ் இலக்கிய விழா

Suganthini Ratnam   / 2010 ஜூலை 16 , மு.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாணசபையின் கல்விப் பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தமிழ் இலக்கிய விழாவும் ஆய்வரங்கும் இம்முறை கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

அடுத்த மாதம் முதலாம் திகதி  முதல் 3ஆம் திகதி வரை 3 தினங்கள் நிகழ்வுகள் நடைபெறும் என பண்பாட்டு அலுவல்கள் அமைச்சுப் பணிப்பாளர் திருமதி என்.ஸ்ரீதேவி தெரிவித்தார்.

இவ்விழாவில் காலை ஆய்வரங்கும் மாலை கலை நிகழ்வுகளும் நடைபெறும். இவ்வாண்டு ஆய்வரங்கத்தின் கருப்பொருள் ஈழத்து இலக்கியத்தின் பெண்கள் என்பதாகும்.

12 ஆய்வாளர்கள் இதில் கலந்து கொள்வர். இந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ள விரும்பும் பேராளர்கள் முன்கூட்டியே தமது பகுதி பிரதேச கலாசார உத்தியோகத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--