2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மன்னாரில் இலவச மருத்துவ முகாம்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


யுத்தத்தினால் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்காக நாற்சதுர சுவிசேஷ சபையின் அனுசரணையில், இலங்கை இராணுவம் - சுகாதார அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இலவச வைத்திய முகாம் உயிலங்குளம், மல்லாவி, பூனகரி ஆகிய இடங்களில் நடைபெற்று வருகின்றது.

மேலும் 19ஆம் திகதி நெடுங்கேணியிலும், 20ஆம் திகதி ஒட்டிசுட்டானிலும், 22 முதல் 24ஆம் திகதிவரை வரை நட்டான்கண்டலிலும் நடைபெறவுள்ளது. இவ் மருத்துவ முகாமிற்காக விசேட மருத்துவ குழு ஒன்று அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா, சுவிஸ் ஆகிய நாடுகளிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் நமது நாட்டின் மருந்துவர்களும் கலந்துகொள்வர்.

ஏற்கனவே இவ்வமைப்பினர் தமது மருத்துவ முகாம்களை திருகோணமலை, மட்டக்களப்பு, வவுனியா ஆகிய மாவட்டங்களில் நடத்தியிருந்தனர். நான்காவது முகாமாக மன்னாரில் இப்பொழுது நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .