2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

பாழடைந்த சிறையில் இயக்குநர் சீமான்

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிவினைவாதத்தினை தூண்டும் விதத்தின் பொது மேடையில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட தென்னிந்திய இயக்குநரும் நாம் தமிழர் அமைப்பின் தலைவருமான சீமான், தன்னை பாழடைந்த தனி அறையில் அடைத்து வைத்திருப்பதாகவும் தனக்கு முதல்வகுப்பு அறை வழங்கப்படவேண்டும் என கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.

இவ்மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், இக்குற்றச்சாட்டு தொடர்பாக எழுத்துமூலமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் அரசு அறிவிக்கவேண்டுமென கூறி வழக்கினை ஒத்திவைத்திருக்கிறது.

இதேவேளை சீமான்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தினையும் இன்று தமிழக அரசு பிரயோகித்திருக்கிறது. இதுதொடர்பாக யாராவது ஆர்ப்பாட்டம் செய்தாலோ அல்லது சுவரொட்டிகள் ஒட்டினாலோ அவர்கள்மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0

  • xlntgson Saturday, 17 July 2010 08:28 PM

    இந்தியாவில் எல்லா சிறையும் பாழடைந்தது தான். இவர்கள் சொகுசு கேட்கிறார்களோ தெரியவில்லை. வேலூர் சிறை சரியில்லை என்றால் புழல் சிறை வசதி கூடியதா? எல்லா சிறையும் சிறைதானே.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--