2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

எப்பாவலை நால்வர் கொலை; பிரதான சந்தேக நபர் கைது

Super User   / 2010 ஜூலை 17 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்பாவலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபரான 21 வயது இளைஞர் நேற்றிரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அநுராதபுரம் மாவட்டத்தின் எப்பாவலையிலுள்ள வீடொன்றில் கடந்த புதன்கிழமை இரு பிள்ளைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கத்தியால் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவ்வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் இச்சம்பவத்தின் பின்னர் தலைமறைவானதையடுத்து அவரை கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டன.

இந்நிலையில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் வைத்து மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டதாக கோட்டை பொலிஸ் நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--