2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

மதவாச்சி – தலைமன்னார் புகையிரத பாதைகள் திட்டமிட்டபடி நடைபெறுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவிப

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


வடக்கின் புகையிர பாதையின் மதவாச்சியிலிருந்து தலைமன்னார் வரையான பகுதியினை விஸ்தரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இது திட்டமிட்டபடி குறித்த காலப்பகுதிக்குள் நிறைவடையும் என நம்புவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

தாண்டிக்குளத்திலிருந்து ஒமந்தை வரையில் அமைக்கப்பட்டுள்ள புகையிரத பாதையின் அமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக அண்மையில் சென்றிருந்தபோதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணம் வரையிலான புகையிரத பாதையின் நிர்மாண பணிகள் தற்போதையை நிலையில், ஓமந்தை புகையிரத நிலையம் வரை நிறைவடைந்துள்ளதாகவும் இந்த பணிகள் துரிதகதியில் தொடர்ந்தும் இடம்பெற்றுவருவதாகவும் அமைச்சர் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .