2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

கொஹுவல - ஹைலெவல் வீதியில் புதிய போக்குவரத்து நடைமுறை

Menaka Mookandi   / 2010 ஜூலை 18 , பி.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஹுவலையிலிருந்து ஹெவ்லோக் வீதி வரையான பிரதான வீதியில், புதிய போக்குவரத்து நடைமுறையொன்று அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில், இந்த புதிய நடைமுறையானது நாளை காலை 6.00 மணி முதல் அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தெரிவித்தார்.

குறித்த வீதியில் தினந்தோறும் காலையிலும் மாலையிலும் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்குடனேயே இந்த விசேட போக்குவரத்து நடைமுறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது என்றும் அவர் கூறினார். இந்நிலையில், பாமன்கடையிலிருந்து ஹைலெவல் வீதிக்கு வரும் வாகனங்கள் ஸ்டெபர்ர்ட் வீதியை பயன்படுத்த முடியாது.

இந்த வாகனங்கள் பாமன்கடையிலிருந்து இடது புறம் திரும்பி ஹெவ்லொக் வீதி, மாயா மாவத்தை ஊடாக ஹைலெவல் வீதியை வந்தடைய முடியும். ஹைலெவல் வீதி ஊடாக நுழையும் வாகனங்கள் இடது பக்கம் திரும்பி பாமன்கடையிலிருந்து பழைய ஹெவ்லொக் வீதி ஊடாக மாயா மாவத்தையை வந்தடையமுடியும்.

டபிள்யூ.ஏ.டி.சில்வா மாவத்தையிலிருந்து கொஹுவலைக்குச் செல்லும் வாகனங்கள் பழைய ஹெவ்லொக் வீதியை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டது. அதற்கு பதிலாக மாயா வீதி ஊடாக ஹைலெவல் வீதிக்கு வந்து அங்கிருந்து ஸ்டெபர்ட் வீதி ஊடாக பாமன்கடைக்குச் சென்று கொஹுவலையை அடைய முடியும்.

ஹெவ்லொக் வீதியிலிருந்தும் வாகனங்கள் மாயா சுற்று வட்டத்தை பயன்படுத்தி டபிள்யூ.ஏ.டி.சில்வா மாவத்தையூடாக பாமன்கடையை அடையமுடியும் என்று பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .