2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

மட்டு. சிறையிலுள்ள மாணவனுக்கு பரீட்சை எழுத விசேட அனுமதி

Super User   / 2010 ஓகஸ்ட் 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதியொருவருக்கு நாளை ஆரம்பமாகும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
 

20 வயதான ஏ.சுகிர்தன் எனும் இம்மாணவன் கடந்த வருடம் ஏப்ரல் மாதம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.


இவ்வருடம் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதுவதற்கு விண்ணப்பித்து யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதுவதற்கான அனுமதி அட்டையும் அம்மாணவனுக்கு கிடைத்திருந்தது.


ஆனால் யாழ்ப்பாணத்தில் பரீட்சை எழுதுவதற்கு அனுமதியளிக்குமாறு விடுத்த கோரிக்கையை அக்கறைப்பற்று நீதிமன்றம் நிராகரித்திருந்தது.


எனினும், அம்மாணவன் மட்டக்களப்பில் பரீட்சை எழுதுவதற்கு விசேட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர்.டி. சில்வா தெரிவித்துள்ளார். இதற்காக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--