2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இராணுவ நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு

Super User   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜெனரல் பொன்சேகாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி இன்று இராணுவ நீதிமன்றத்திற்கு சமுகமளிக்காமை காரணமாக இவ்விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாக இராணுவ ஊடகப் பிரிவு அதிகாரி கேணல் துமிந்த கமகே டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இவ்வழக்கில் சாட்சியமளிப்பதற்காக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். எனினும் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் அவர்கள் சாட்சியமளிக்க முடியவில்லை.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--