2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வன்னி பாடசாலைகளை புனரமைக்க நிதி ஒதுக்குமாறு நாமலிடம் கோரிக்கை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

யுத்தம் காரணமாக சேதமாகியுள்ள வன்னி மாவட்ட பாடசாலைகளை புனரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிடம் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எல்.இளங்கோவன் கோரியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்துக்கான நான்கு நாள் விஜயமொன்றை நாமல் ராஜபக்ஸ எம்.பி. உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்டுள்ள நிலையிலேயே மாகாண அமைச்சின் செயலாளர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

கிளிநொச்சியின் நான்கு நாட்கள் தங்கியுள்ள இவர்களுக்கு அம்மாவட்ட பாடசாலை மாணவர்களினாலும் அதிபர்கள் ஆசிரியர்களினாலும் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--