2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வவுனியா வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.விவேகராசா)

கொழும்பிலிருந்து வந்த விலைக்கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகள் வவுனியா நகர வர்த்தக நிலையங்களில் நடத்திய பரிசோதனை நடவடிக்கையின் காரணமாக பல வியாபாரிகள் அகப்பட்டனர்.

கட்டுப்பாட்டு விலையிலும் கூடிய விலைக்கு பொருள்களை விற்பனை செய்தமை, பொருள்களில் விலைகள் குறிப்பிடப்படாமை, காலாவதியான பொருள்களை விற்பனை செய்தமை போன்ற குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

அத்துடன், உணவு தேநீர்ச்சாலைகளில் நடத்தப்பட்ட சோதனையிலும் தரம் குறைந்த உணவுகள் விற்பனைக்கு வைக்கப்பட்ட வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மீதும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை,  வவுனியா நகர கடை உரிமையாளர்கள் தமது அன்றாட கழிவுப் பொருள்களை உரியமுறையில் அகற்ற வசதியாக குப்பை கூடைகளுக்குள் இடவேண்டும். அதனை மீறிச் செயல்படும் வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.  வவுனியா மில் வீதியிலுள்ள சில வர்த்தகர்கள் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--