2025 ஜூலை 09, புதன்கிழமை

கண்டியில் காட்டுத் தீ

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி மாவட்டத்திலுள்ள விக்டோரியா மற்றும் ரன்தெனிகல ஆகிய நீர்தேக்கங்களுக்கு மேற்புரத்தில் இன்று இடம்பெற்ற காட்டுத் தீ காரணமாக பெருமளவான காடு அழிவடைந்துள்ளது.

விக்டோரியா ரன்தெனிகல ரன்டெம்பே நீர்த்தேக்கங்களுக்கு அண்மித்த பிரதேசம் பாதுகாக்கப்பட்ட வனப் பிரதேசமாக பிரகடனப்படுத்தியுள்ளதுடன் இக்காட்டில் இலங்கையில் மிக அரிதாகக் காணப்படும் நூற்றுக்கணக்கான விலங்கினங்கள் வாழ்கின்றன.

தற்போது இத்தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காட்டில் ஏற்பட்ட தீ காரணமாக காடு அழிவதுடன் அரிதாகிக்கொண்டு செல்லும் விலங்குகளும் பாதிப்பக்குள்ளாகியுள்ளதாக இப்பிரதேச சுற்றாடவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .