Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 01:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கடற்பகுதிகளுக்குள் குறிப்பாக பதற்றமான பிரதேசங்கள் எனக் கருதும் கடற் பகுதிகளுக்குள் இந்திய மீனவர்கள் பயணிக்க கூடாது என்று இந்திய அரசாங்கம் இன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை, இந்திய மீனவர்கள் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் கைது செய்யப்படும் நிகழ்வுகளும் தற்போது குறைவடைந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இன்று ராஜ்ய சபையில் தெரிவித்துள்ளார்.
இதன்போது, மீனவர்கள் தொடர்பில் கடந்த 2008ஆம் ஆண்டு இரு நாடுகளும் ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்ததை நினைவூட்டிய அவர், அந்த ஆண்டில் மாத்திரம் 1,456 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் இந்த எண்ணிகை 2009ஆம் ஆண்டில் 127ஆகக் குறைவடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை இவ்வாண்டின் ஜூலை மாதம் வரையில் 26 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த 2008ஆம் ஆண்டில் ஐந்து மீனவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டில் மீனவர்கள் எவரும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்படவில்லை என்று தெரிவித்த இந்திய வெளிவிவகார அமைச்சர், இருப்பினும் இவ்வாண்டில் இந்திய மீனவர் ஒருவர் கொல்லப்பட்டதான சம்பவம் இடம்பெற்றதாக கூறினார்.
2008ஆம் ஆண்டில் மீன் பிடித்தல் ஏற்பாடுகள் மீதான இணக்கப்பாட்டில் இரு நாடுகளும் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தவறுதலாகத் தாண்டும் மீனவர்களை கையாளும் நடைமுறை ஒழுங்குகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது. (பி.ரி.ஐ)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
16 minute ago
16 minute ago
23 minute ago