Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
எமது சமூகத்தை நல்லதொரு நிலைக்கு கொண்டு வர அனைவரும் எங்களுடன் சேர்ந்து உழைக்க முன்வர வேண்டும் என ஈ.பி.டி.பியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.
இன்று கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆரம்பக் கல்வி மன்றத்தினால் நடாத்தப்பட்ட கலைத்திறன் விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில் இங்கு ஆசிரியர்கள் கலாசாலையில் பயிற்சி பெற்றுக் கொண்டு இருக்கின்றீர்கள். உங்களது திறமைகளை வெளிக்கொண்டு வரும் நிகழ்வே இதுவாகும். இங்கு சில மாதங்களுக்கு முன்பு சில கசப்பான சம்பவங்கள் இடம்பெற்று தற்பொழுது ஒரு சுமுகமான நிலைக்கு வந்துள்ளமை வரவேற்கத்தக்கது.
கோப்பாய் ஆசிரியர் கலாசாலைக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு தான் தயாராகவுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்தார்.
நீங்கள் அனைவரும் வன்னிக்குச் சென்று உங்கள் சேவையை செய்வீர்கள் என நம்புகின்றேன். அங்கு கல்வி நிலைமைகள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்றது. அங்குள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த நீங்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து உழைக்க முன்வர வேண்டும் என்றும் சந்திரகுமார் கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து ஆரம்பக் கல்வி மன்றம் நடாத்திய போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கான பரிசில்களை பாராளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் சந்திரகுமாரும், ஈ.பி.டி.பி.யின் வலிகாம இணைப்பாளர் ஜீவனும் அவர்களும் வழங்கிக் கௌரவித்தனர். அதனைத் தொடர்ந்து கோப்பாய் ஆசிரியர் கலாசாலை ஆசிரியர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் வவுனியா தேசியக் கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி திரு.பேர்னாட் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் கணபதிப்பிள்ளை கலாநிதி செ.திருநாவுக்கரசு உட்பட பெருமளவிலானோர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago