Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 12 , பி.ப. 12:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் ஆடைத் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சிறு கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் றிஷாட் பதியுதீனின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் என்.எம்.முனவ்பர் கூறியுள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் தையல் பயிற்சியினைப் பூர்த்தி செய்த மாணவிகளின் கண்காட்சி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மன்னார் மாவட்டம் துரித கதியில் வளர்ச்சியடைய வேண்டும் எனவும் அதற்காகவே அமைச்சர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார் என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், முதற்கட்டமாகவே இந்த தையல் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் இதுவரையில் சுமார் 500பேர் வரையில் தொழில் வாய்ப்பினைப் பெற்றுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் இணைத்துக்கொண்டு மன்னாரில் ஆடைத் தொழிற்சாலையொன்றை அமைக்க அமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகின்றார் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
40 minute ago
42 minute ago