2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை - மாவை

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 16 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் கட்சிகளின் அரங்கத்திலிருந்து கலந்துரையாடுவதற்கான எவ்வித அழைப்பிதழ் எதுவும் இதுவரையில் தமது கட்சிக்கு கிடைக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் மாவை சேனாதிராஜா எம்.பி. தெரிவித்தார்.

தனிப்பட்ட  காரணத்திற்காக இந்தியா சென்றுள்ள கூட்டமைப்பின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தன் நாடு திரும்பியதும் இது குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ்க் கட்சிகள் ஒன்றினைந்த ‘‘தமிழ்க் கட்சிகளின் அரங்கம்’’ ஐந்தாவது தடவையாக மட்டக்களப்பில் கடநத சனிக்கிழமை  சந்தித்து கலந்துரையாடியது.

இதில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம், ஈ.பி.ஆர்.எல்.எப் (நாபா), டெலோ மற்றும் புளொட், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு முதலான கட்சிகள் கலந்துக்கொண்டன.

இதன்போது தமழ் மக்கள் எதிர்நோக்குகின்ற தேவைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன் அவற்றை அரசாங்கத்தின் கவனததிற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு பெற்றுக்கொடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X