2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவு

Super User   / 2010 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரச அலைவரிசையின் முன்னாள் ஊடகவியலளாரான சுசில் கிந்தல்பிட்டிய தொடர்பான வழக்கு விசாரணையில் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்கான காரணம் காட்டுமாறு மீரிஹானை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரிக்கு  கொழும்பு மேலதிக நீதவான் இன்று உத்தரவிட்டார்.
 

கிந்தல் பிட்டிய தொடர்பான விசாரணை விபரங்களை இன்று  சமர்ப்பிக்குமாறு மீரிஹானை பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.


ஆனால், இன்று மீரிஹானை பொலிஸார் சமுகமளிக்கத் தவறியதையடுத்து  செப்டெம்பர் 16 ஆம் திகதி நிதிமன்றத்தில் ஆஜராகி இதற்கான காரணம் காட்டுமாறு மீரிஹானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு நீதவான் உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X