Super User / 2010 ஓகஸ்ட் 17 , பி.ப. 04:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
நக்கிள்ஸ் மலைத்தொடரிலுள்ள 21 ஹெக்டேயர் காணி விமானப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவுக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டமை குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாக காணி அமைச்சின் செயலாளர் அசோக்க பீரிஸ் தெரிவித்துள்ளார்.
எயார் சீவ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க அக்காணியில் விடுமுறை இல்லமொன்றை அமைத்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சுற்றாடல் ரீதியாக முக்கியத்துவம் மிக்கப் பகுதியிலுள்ள ரோய் டி சில்வா என்பவருக்குச் சொந்தமான மேற்படி காணியை 1961 ஆம் ஆண்டின் காணிச் சுவீகரிப்புச்சட்டத்தின் கீழ் அரசுடைமையாக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்ட பின்னர் அதனை மூன்றாவது தரப்பொன்றுக்கு விற்பனை செய்வதோ அதில் நிர்மாணங்களை மேற்கொள்வதோ சட்டவிரோதமானது என காணி அமைச்சின் செயலாளர் அசோக்க பீரிஸ் தெரிவித்தார்.
காணியின் உரிமையாளருக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டு அக்காணி அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்ட நிலையில் அக்காணி விமானப்படைத் தளபதிக்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அசோக பீரிஸ் தெரிவித்தார்.
காணி சுவீகரிக்கப்பட்ட விடயம் மறைக்கப்பட்டு விமானப்படைத் தளபதிக்கு அது விற்பனை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் இவ்விடயம் குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை நாடியுள்ளதாகவும் காணி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
"காணிக்கு மாத்திரமே நாம் நஷ்ட ஈடு வழங்குவோம். அதில் மேற்கொள்ளப்பட்ட நிர்மாணத்திற்கான செலவுகள் விவகாரத்தை காணியை விற்றவரும் வாங்கியவரும் தீர்த்துக்கொள்ள வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
1 hours ago
1 hours ago
2 hours ago