2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

கிராமசேவை அலுவலர்களுக்கு பதவி உயர்வு

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

கிராம சேவை அலுவலர் தரம் - 11இனால் 15 வருட சேவை காலத்தை பூர்த்தி செய்துள்ள கிராம அலுவலர்களை தரம் - 1இற்கு சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படிடையில் பதவி உயர்த்த பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.

தரம் - 11இல் 15 வருட சேவைகால நிபந்தனையை பொறுத்தவரை சமூர்த்தி விசேட சேவை அலுவலர்கள் உட்பட ஏனைய சேவைகளில் இருந்து கிராம அலுவலகர்கள் சேவைக்கு உள்வாங்கப்பட்டிருந்தால் அச்சேவைக்காலம் உள்ளடக்கப்படும் எனலாம்.

1977 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற அரசியல் பழிவாங்கல் காரணமாக வேலை இழந்து 1995 ஆம் ஆண்டு வேலையிழந்து மீண்டும் கிராம அலுவலர் சேவையில் இணைத்தவர்களை பொறுத்தவரை 1977 ஆண்டு முதல் அவர்களது சேவைக்காலம் அமையும் என்றும் அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த சேவை நற்பெயர் பாராட்டுக்கள் பாராட்டு சான்றிதழ்கள் ஆக்க பூர்வமான பாராட்டுக்கள் சேவை மூப்பு, சேவை அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக நேர்டமுகப் பரீட்சையில் நடைபெற்று புள்ளித்திட்டம் ஒன்றும் இப்பதவி உயர்விற்காக அமுல்படுத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பங்களை எதிர்வரும் 20.09.2010 இற்கு முன்னதாக அனுப்பி வைக்கபட வேண்டும் என்றும் இது கூறப்பட்டுள்ளது.
 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X