Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 20 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் பொன்சேகா நாடாளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை சிறப்புரிமை தொடர்பாக மீண்டும் கேள்வியெழுப்பினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில், தான் கலந்து கொள்வதற்கான அனுமதி வழங்கப்படவில்லை எனவும் சரத் பொன்சேகா கூறினார்.
இந்தக் குழுவில் தானும் ஒரு உறுப்பினர் எனவும், ஆனால் மேற்படி கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக இராணுவ அதிகாரிகள் உரிய நேரத்தில் தன்னை அழைத்து வரவில்லை எனவும் தெரிவித்தார்.
மேலிடத்து உத்தரவே இதற்கு காரணம் எனவும் இதன் காரணமாக தனது நாடாளுமன்ற சிறப்புரிமை மீறப்பட்டிருப்பதாகவும் மேலும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago
8 hours ago
05 Jul 2025