2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

சர்வ கட்சி பிரதிநிதிகள் குழுவின் யோசனைகள் குறித்த செயலமர்வு

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அரச மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தை ஜனநாயக மயமாக்கல் செயல்திட்டத்தின் கீழ் அரசியலமைப்புக் கற்கை நிறுவனம் சர்வ கட்சிப் பிரதிநிதிகள் (APRC) குழுவின் யோசனைகள்  பற்றிய செயலமர்வென்றை இன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் நடத்தவுள்ளது.

கொழும்பு 7, இல 114, விஜயராம மாவத்தையிலுள்ள  கெக்டர் கொப்பேக்கடுவ கமத்தெழில் ஆராய்ச்சி பயிற்சி நிலையத்தில் இச் செயலமர்வு  நடைபெறவுள்ளது.

செயலமர்விற்கு கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தலைமை தாங்கவுள்ளதுடன் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான வாசுதேவ நாணயக்காரா சர்வ கடசிப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜன் மற்றும் நிசாம் காரியப்பர் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.  இப்பகிரங்கச் செயலமர்விற்கு ஆர்வமுள்ள அனைவரும் அழைக்கப்படுகின்றனர்.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--