Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 11:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
(லக்னா பரணமன்ன)
2001 ஆம் ஆண்டில் செய்துகொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் சிறந்ததொரு திட்டம் எனவும் ஆனால், அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அதை சரியாக ஒருங்கிணைக்க முடியாததால் அது தோல்வியடைந்தாகவும் அரசாங்க சமாதான செயலகத்தின் முன்னாள் பணிப்பாளர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்தள்ளார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கும்போதே பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
"போர் நிறுத்த ஒப்பந்தத்துடன் சம்பந்தப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவினதும் ஏனைய பல அதிகாரிகளினதும் நடவடிக்கைகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நன்மையளித்தன. புலிகளுக்கு சமாதான செயலகம் நிதி வழங்கியது. அந்நிதியின் மூலம் என்ன செய்யப்படுகிறது என்பதை கண்காணிப்பதற்கு அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை" என அவர் கூறினார்.
"முன்னாள் ஜனாதிபதிகளான பிரேமதாஸ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க போலல்லாது, ரணில் விக்கிரமசிங்க தான் புலிகளின் கைப்பாவையாக இருப்;பதன் தவறை உணர்ந்துகொள்ளவில்லை. அவரின் சிறுபிள்ளைத்தனமான குறைகூறப்படத்தக்க நடவடிக்கைகள் காரணமாக போர் நிறுத்தக் காலமானது, தமிழீழ விடுதலைப் புலிகளை எதிர்த்த அனைத்து தமிழ்த் தலைவர்களுக்குக்கும் நம்பிக்கைத் துரோகமாக அமைந்தது" எனவும் ரஜீவ விஜேசிங்க கூறினார். (DM)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
6 minute ago
21 minute ago
28 minute ago