Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 01 , பி.ப. 12:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன் டயஸ்)
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுகையில் தப்பியோடி முயன்றவேளை, அதிரடிப்படையினரால் கொல்லப்பட்ட முக்கிய ஹெரோயின் கடத்துனரான ஜயக்கொடி ஆராய்ச்சிகே ஒல்கொட் பெரேரா குருநாகலில் தான் வாங்கிய இரண்டு வீடுகளில் வசித்து வந்தமை தெரியவந்துள்ளது.
அதில் ஒரு வீடு குருநாகல் நகரில் மிலேனியம் நகர் வீட்டுத் திட்டத்திலமைந்தது. இதை இவர் 25 மில்லியன் ரூபாய்க்கு ஒரு மாதத்திற்கு முன் வாங்கி தனது காதலியுடன் வசித்து வந்தார். இரண்டாவது வீடு வாஹெர என்னும் இடத்திலுள்ளது.
இவர் 10 வருடங்களுக்கு முன் தலைமறைவான ஒல்கொட் பெரேரா. ஜீப்பில் அழைத்துச் செல்லப்பட்டபோது ஒரு அதிரடிப்படை அதிகாரி, பிஸ்டலைப் பறித்து சுடமுயன்ற வேளையில் சுடப்பட்டதாக அதிரடிப்படை பிரதி பொலிஸ்மா அதிபர் கே.எம்.எல்.சரத் சந்திரா தெரிவித்தார்.
நேற்று மாலை மினிவாங்கொடையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. அதன் பின்னர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒல்கொட் மரணமானார்.
26 கொலைகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த இவர், குருநாகலில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025