2021 ஜனவரி 16, சனிக்கிழமை

அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்

Super User   / 2010 செப்டெம்பர் 12 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனவரி மாதம் அனைத்து மாநகரசபைகள், நகரசபைகள், பிரதேச சபைகளுக்கு ஒரேநாளில் தேர்தல் நடத்தப்படும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் எதிர்வரும் மார்ச் மாதம் முடிவடையவுள்ளது. இந்நிலையில் ஜனவரி மாதம் அவற்றுக்கான தேர்தல்களை நடத்த அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது பதவிக்காலத்திற்கான பதவிப்பிரமாணம் எதிர்வரும் நவம்பர் மாதம் மேற்கொள்ளப்படும். அதையடுத்து வரவுசெலவுத் திட்ட விவாதங்கள் முடிவுற்றபின் டிசெம்பர் மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்படும்.

3 தசாப்தகால யுத்தம் காரணமாக அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்த முடியாமல் இருந்தது. எனினும் இம்முறை வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாகாணங்களிலும் ஒரே தினத்தில் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .